2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மயிலிட்டிக்கு இன்று விடிவு

Yuganthini   / 2017 ஜூலை 03 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட 54 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.   

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில், இன்று திங்கட்கிழமை(03) இடம்பெறவுள்ள விசேட வைபவத்தின் போதே, இவை விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இதற்கான ஏற்பாடுகளை, யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

நிலங்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர்,  மயிலிட்டிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள பிரதான குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த இடங்களில் குடியிருக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஊரணிப் பிரதேசத்திலுள்ள 35 ஏக்கர் நிலம் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான பிரச்சினையைக் கவனத்திற்கொண்டு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X