2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘மயிலிட்டியில் மீள்குடியேற 120 குடும்பங்கள் தயார்’

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 05 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலிட்டித்துறை பகுதியில் மீள்குடியேறுவதற்கு, 120 குடும்பங்கள் தயாராகவுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் நேற்று (04) தெரிவித்தார்.

கடந்த 27 ஆண்டுகளாக, இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் நிலப்பகுதி நேற்று முன்தினம் (03) விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட பகுதியான ஜே - 251 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, 27 ஆண்டுகளுக்கு முன் இடம்பெயர்ந்து,  தற்காலிக இடைத்தங்கல் முகாம்கள், வெளியிடங்களில், 252 குடும்பங்கள், தற்காலிகமாகத் தங்கியுள்ளன.

இந்நிலையில், இடைத்தங்கல் முகாமில் உள்ள 40 குடும்பங்களும் வெளியிடங்களில் தற்காலிகமாகக் குடியமர்ந்துள்ள 80 குடும்பங்களுமாக, மொத்தமாக 120 குடும்பங்கள், நேற்று முன்தினம் (03) விடுவிக்கப்பட்ட 54 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களுக்குரிய உதவிகளை வழங்கி, அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, மாவட்டச் செயலர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X