2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மரக்கூட்டுத்தாபன ஏல விற்பனை

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.கண்ணன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நல்லூர், ஒட்டுசுட்டான் ஆகிய  இடங்களில்  உள்ள  மரக் கூட்டுத் தாபனத்தின் விற்பனை நிலையங்களில் தேக்கு, பாலை, வேம்பு, முதிரை  ஆகியவற்றின் மரக்குற்றிகள், பலகைகள், தீராந்திகள் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யும்  கால  அட்டவணையை யாழ். பிராந்திய முகாமையாளர் எஸ். சிறிஸ்காந்தராசா அறிவித்துள்ளார்.               

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “எதிர்வரும் 4 ஆம் திகதி காலை -10 மணிக்கு கிளிநொச்சி  விற்பனை நிலையத்திலும், 9ஆம் திகதி காலை 10 மணிக்கு ஒட்டுசுட்டான் விற்பனை நிலையத்திலும்,   18ஆம் திகதி யாழ்ப்பாணம் விற்பனை நிலையத்திலும்,  25 ஆம் திகதி காலை 10 மணிக்கு நல்லூர் விற்பனை நிலையத்திலும் ஏல விற்பனை நடைபெறவுள்ளது.                  

மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர், மரக்கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களின் ஒட்டுசுட்டான் 0212061789,  கிளிநொச்சி 0212285409, யாழ்ப்பாணம் 0212222349, நல்லூர் 0212216610, தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்” என  அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X