2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மரக்குற்றிகள் மீட்பு ; இருவர் தப்பியோட்டம்

Janu   / 2024 மே 12 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில், சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவரை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும், மரக்குற்றிகளையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது .

கனகம்புளியடி சந்திக்கு அருகில்  கடமையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பொலிஸாரால் , சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினை வழிமறித்து சோதனை செய்த போது டிப்பர் வாகனத்தில் மண்ணுக்குள் புதைத்த நிலையில் பாலை மர குற்றிகளை கடத்தி செல்லவது தெரியவந்துள்ளது. 

இதன்பொது டிப்பர் சாரதி மற்றும் உதவிக்கு வந்தவருமாக இருவரும் சமரசம் பேசி ஒரு இலட்சம் ரூபாய் வரையில் கையூட்டு வழங்க தயார் என பொலிஸாரிடம் கூறியுள்ளனர். 

அதனை ஏற்க மறுத்த பொலிஸார், வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்ல முயற்சித்த போது குறித்த டிப்பர் சாரதி மற்றும்  உதவியாளர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

பின்னர் ,டிப்பர் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்த பொலிஸார் , மண்ணை அகற்றி பார்த்த போது மண்ணுக்குள் 150 பாலை மர குற்றிகள் காணப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் , தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்.றொசாந்த் ,பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X