Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றும் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர், வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்றுவந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில், கடந்த வருடம் நவம்பர் 17ஆம் திகதியன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் நடந்து வருகின்ற நிலையில், மரணமடைந்த மாணவன் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஒரு புலன் விசாரணையினை மேற்கொள்ளுமாறும், 13. 10. 2020 அன்று, மன்றில் கோரினார்.
இதை தொடர்ந்து, முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் தகவல்களை வழங்குமாறு, நீதவான் பணிப்புரை விடுத்திருந்தார்.
மீண்டும், இந்த வழக்கு விசாரணை, நேற்று (08) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான தகவல்கள் பதியப்பட்டு உள்ளதாகவும் தொலைபேசி இரசாயன பகுப்பாய்வு அறிக்க இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அதனை துரிதமாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தொலைபேசியின் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையை பெறுவதற்கு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அறிவிப்பதாகவும் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும், நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025