2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

மருமகனைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனாருக்கு 7 வருடச் சிறை

எம். றொசாந்த்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 2012ஆம் ஆண்டு, மருமகனைக் கொலை செய்த மாமனாருக்கு, 7 வருட கடூழியச் சிறைதண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், இன்று (23) தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கின் இரண்டாவது எதிரியான இறந்தவரின் மனைவியின் சகோதரனும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதோடு, அவருக்கும் 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மற்றொரு சந்தேக நபர், குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில், இளம் குடும்பத் தலைவரான  தங்கராஜா சரத்பாபு என்பவரே, இவ்வாறு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த கொலை தொடர்பில், இறந்தவரின் மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் உள்ளிட்ட மற்றொருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், அவர்கள், யாழ். நீதவானால், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே,  இந்தக் கொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .