Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 03 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“இலங்கையில் மலேரியா நோயானது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அது மீள உருவாகாமல் பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்” என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
உலக மலேரியா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று (03) யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக மலேரியா தினமானது ஏப்ரல் 25 ஆம் திகதி கொண்டாப்படுகின்றது. இலங்கையில் மலேரியா முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என 2012 ஆம் ஆண்டு உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் இலங்கைக்கு எந்த நேரத்திலும் மலேரியா நோய் பரவலாம் என்ற அச்சம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மலேரியா நோய் காவி கிருமிகளை கொண்டுவருகின்ற போது, அதனை காவிச் செல்லும் நூளம்புகள் இங்கே ஏராளம் உள்ளன. இதனால் மலேரியா நோயானது இலகுவாக பரவிட முடியும்.
எனவே இவற்றை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தற்போது மலேரியாவை பரப்புகின்ற புதிய வகை நுளம்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்துவது தொடர்பான சோதனை நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு காய்ச்சல்கள் ஏற்படும் போது அவர்களை முழுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதுக்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர மலேரியா நோய் உள்ள நாடுகளுக்கு செல்வோருக்கும் அந் நோய் தடுப்பு தொடர்பான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இலங்கையில் இருந்து ஒழிக்கப்பட்ட மலேரியா நோயானது மீண்டும் நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்த சுகாதார துறையினர் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago