Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 02 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மல்லாவி வைத்தியசாலையில் பணிபுரியும் 47 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான நபர், கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்படி நபருடன் தொடர்புகளைப் பேணியவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கொழும்பில் மேசன் வேலைக்குச் சென்று திரும்பிய ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரொருவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை, மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகார பணிமனை இன்று (02) விடுத்துள்ளது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமையால் எமது பிரதேசத்திலும் தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“எனவே, சகல விழாக்கள், நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள், தனியார் வகுப்புகள் மற்றும் சமய ஆராதனைகளை உடனடியாக நிறுத்துவதுடன், சுகாதார நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்குமாறும் வலியுத்துகின்றோம். தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .