2025 ஜூலை 19, சனிக்கிழமை

மழையால் 54 குடும்பங்கள் பாதிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த அடைமழை காரணமாக 54 குடும்பங்களைச் சேர்ந்த 219 பேர்; பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் வியாழக்கிழமை (07) தெரிவித்தார்.

கடந்த இரண்டு தினங்களாக பெய்த அடை மழை காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், பண்டாரவன்னியன் கிராமத்தில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேரும் புளியங்குளம் கிராமத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையா நிவாரண உதவிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X