2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மா மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்

Princiya Dixci   / 2022 மே 15 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

யாழ்ப்பாணத்தில் மா மரத்தில் ஏறி, கொப்பு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று  (14) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது- 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

மா மரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி கொப்பு வெட்டும்போது அவர் நின்ற கொப்பு முறிந்ததால் தவறி வீழ்ந்துள்ளார்.

கீழே வீழ்ந்து சுயநினைவற்றுக் காணப்பட்ட குடும்பஸ்தரை, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X