2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாகாண மரநடுகை நிகழ்வு மன்னாரில் நாளை

Editorial   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
“வடமாகாண மரநடுகை மாதம், நாளை  மறுதினம்(01) தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில், மாகாண மரநடுகை மாதம் நாளை ஆரம்பிக்கப்படும்” என, வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக, மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நிகழ்வு, மன்னார் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் நாளை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, வடமாகாணத்தில் உள்ள 25 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டு, பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து தலா ஒவ்வொரு கிராமம் தெரிவுசெய்யப்பட்டு, அந்தக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு, தலா 5 மரக்கன்றுகள்படி வழங்கப்படும்.

“அதேபோல், வடமாகாண அரச திணைக்களங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டால், தனியார் நிறுவனங்களுக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்படும். மேலும், பாடசாலை மாணவர்களுக்கிடையில் மரநடுகை மாதம் தொடர்பாக, கவிதைப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் ஆகியன நடத்தப்படவுள்ளன” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .