2025 மே 19, திங்கட்கிழமை

மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் விசாரணை

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மயானத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக மயானத்தின் காவலாளி கிராம சேவையாளருக்கு அறிவித்தார்.

கிராம சேவையாளர் அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு அறிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகத்துக்கு இடமான இடத்தினை ஆராய்ந்தபோது, சடலம் ஒன்று புதைக்கபட்டு இருக்கலாம் என்பதுக்கான அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியினை அகழ்வதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் அனுமதியை கோரினார்கள். அதற்கு நீதிவான் அனுமதியளித்தார்.

இந்நிலையில் நேற்று (12) சந்தேகத்திற்கு இடமான பகுதி அகழப்பட்டது. அதன் போது அங்கு மாடோன்றின் சடலம் மீட்கப்பட்டது.

அதனை அடுத்து சடலமாக மீட்கப்பட்ட மாட்டின் காதில் உள்ள இலக்கத் தகட்டில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து உரிமையாளரை கண்டறியுமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X