எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி, நடத்துனர், மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து இன்று (23) தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பூவரசன்குளம் ஊடாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி, நடத்துனர் ஆகியோரே தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ்ஸ_ம் தனியார் பஸ்ஸ_ம் ஒன்று வீதியில் போட்டி போட்டு மிக வேகமாக பயணித்துள்ளது.
இது தொடர்பாக வீதியால் சென்ற மாணவன் சாரதியிடம் வினவியுள்ளார். இதன்போது, சாரதிக்கும் மாணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சாரதி, நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து மாணவன் மீது தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
இதன்போது, அவ்விடத்தில் நின்றவர்கள் மற்றும் பஸ்ஸில் இருந்தவர்கள் மாணவனை தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
அதேவேளை தாக்குதல் நடத்திய சாரதி, நடத்துனர் ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
2 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
3 hours ago
3 hours ago