2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவன் மீது தாக்குதல்: பிரதி பொலிஸ் மா அதிபர் விளக்கம்

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

கஞ்சா கடத்தல், ஆவாக் குழு தொடர்பில் பொதுமக்கள் எந்தப் பயமுமின்றி தகவல்கள் வழங்க முடியுமெனத் தெரிவித்த வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, பொது மக்கள் வழங்கும் தகவல்கள் பாதுகாக்கப்படுமென்றும், அவ்வாறு இரகசிய தகவல்கள் வழங்கவிரும்பும் பொது மக்கள் தனது தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், கிளிநொச்சியில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பரிசீலணை செய்த போது அவர் தகவல் வழங்கியமைக்காக தாக்குதல் நடத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய சிறுவனை தாக்கயமை தொடர்பில் கேட்ட போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது ​தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கஞ்சா கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் தேவையான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியும். தகவல் வழங்குவது தொடர்பாக இரகசியம் பேணப்படும் தகவல் தருபவர்கள் தொடர்பில் யாருக்கும் செல்லமாட்டோம்.

“வேறு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், அந்தப் பிரச்சினைகளை நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்” என்றார்.

“கிளிநொச்சி சம்பவம் தொடர்பாக பரிசீலணை செய்த போது, அந்த சிறுவன் சைக்கிளில் ஓடிப் போனபோது, மோட்டார் சைக்கிள் வருவதை அவதானிக்காமல் சென்றமையினால், விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் வழங்கியமைக்காக சிறுவன் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை” எனவும் குறிப்பிட்டார்.

போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்கள் கிடைத்தால், பொது மக்கள் தேவையான நேரங்களில் தகவல்களை வழங்க முடியுமெனத் தெரிவித்த அவர், பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களிடம்  தகவல் வழங்க முடியுமென்றும் பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

இப்போது, ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள், அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலரை தவிர ஏனையோர் கைதுசெய்யப்படவில்லை. அவர்களையும் மிக விரைவில் கைதுசெய்வோம். இவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரமே கைதுசெய்தோம். 

எனவே, பொது மக்கள் வழங்கும் தகவல்கள், மிகப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்படும். ஆகையினால், பொது மக்கள் எந்த பயமுமின்றி தகவல்களை வழங்க முடியுமென்றும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X