2025 மே 22, வியாழக்கிழமை

மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டிய ஆசிரியை

Editorial   / 2018 மே 17 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் 

யாழ். இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளியில் மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்ற சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த குறித்த முன்பள்ளியில் மாணவர்கள் கற்று கொண்டு இருந்த நேரம் திடீரென ஆசிரியை மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர்.

தனித்து மாணவர்கள் மூடப்பட்ட முன்பள்ளிக்குள் இருந்தபோது, அச்சம் காரணமாக அவல குரல் எழுப்பி அழுத்துள்ளனர்.

அதனை அவதானித்த அயலவர்கள் முன்பள்ளி ஆசிரியையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்ததுடன் மாணவர்களை மீட்கும் முகமாக ஆசிரியை தேடி சென்றுள்ளனர்.

அந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் அயலவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து குறித்த முன்பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவர்களை மீட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

அத்துடன் தற்காலிகமாக முன்பள்ளியை மூடுமாறு பணித்துள்ளனர்.

குறித்த முன்பள்ளியின் ஆசிரியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X