2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மாணவர்களை மோதி விட்டு தப்பியோடிய மினி வான்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 24 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த் 

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பஸ் ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது. 

குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நீர்வேலி பூதவராயர் மடம் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குடும்பப் பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தனது பிள்ளை உள்ளிட்ட இருவரை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளை, பருத்தித்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் அவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும், அவர்களை பாடசாலைக்கு அழைத்து சென்ற குடும்ப பெண்ணும் காயங்களுக்கு உள்ளான நிலையில், அங்கிருந்தவர்கள் மீட்டு கோப்பாய் வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

கோப்பாய் வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X