2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘மாணவர்கள் கடனை அடைக்க வேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மக்கள் பணத்தில் இருந்து தான் இலவச புத்தகத்தைப் பெற்று படித்துள்ளோம், இலவச சீருடையைப் பெற்று படித்துள்ளோம், இலவச கல்வியை பாடசாலையில் பெற்றுள்ளோம், பல்கலைக்கழத்திலும் இலவசமாக படித்துள்ளோம். எனவே, அந்தக் கடன்களை மாணவர்கள் சிறந்த சேவையாற்றி அடைக்க வேண்டுமென, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில், அண்மையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

​அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், பாடசாலைகளில் அனைத்து வசதிகள் இருந்தாலும் நல்ல புலமை, திறமை, அறிவு உள்ள சிறந்த ஆசிரியர்கள் இல்லாது போனால், கல்வியில் அந்த பாடசாலைகள் முன்னேற்றம் காண முடியாதெனவும் குறிப்பிட்டார்.

முன்னர், யாழ்ப்பாண மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதாக ஞாபகமூட்டிய அவர், யுத்தத்தால் அவர்களின் கல்வி வீதம் வீழ்ச்சி கண்டதாகவும் ஆனால் தற்போது கல்வி கற்பதற்குரிய நல்ல சூழல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .