2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாணவியின் சீருடை தொடர்பில் அதிபரிடம் விசாரணை

Editorial   / 2018 மே 31 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்துப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலய கழுத்து பட்டி, மாணவி ஒருவரது சீருடை, செருப்பு போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று (31) காலை மீட்கப்பட்டன.

அவை தொடர்பில், இடைக்காடு மகா வித்தியாலய அதிபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதிபடத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர  பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

அந்த வேளையில் தவறவிடப்பட்ட சீருடை பொதியாக இருக்கலாம் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .