Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன், எம். றொசாந்த்
மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து, சில ஊடகங்களில் நேற்று (01), செய்தி வெளிகியிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பில், இன்று (02), தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்ந்துரைத்த அவர், நேற்றைய தினம் (01), தான், காணி உரிமையாளர்களுடன் பேசுவதாக வெளியான செய்தி பிழையானது என்றார்.
இன்றைய தினமே (02), முதன்முதலாக, காணி உரிமையாளர்களுடன் தான் நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும், அவர் கூறினார்.
இதற்கமைய, காணி உரிமையாளர்களுடன் பேசி, காணியின் உறுதிகளை சரி பார்த்து, காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே, முடிவுகளை எடுக்க முடியும் என்றார்.
8 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Aug 2025