Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவரெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் பொலிஸார், அதனால் அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளாரெனவும் கூறினார்.
கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த இந்தச் சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (03) வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரால், சொரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூடும், சிலையின் கைப்பகுதியையும் உடைக்கப்பட்டன
அதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அந்த நபரைப் பிடித்து, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர் மனநலம் குன்றியவரென தெரியவந்ததையடுத்து, அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மாதாவின் சொரூபம், பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா தேவாலயத்தின் உட்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago