Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், செல்வநாயகம் ரவிசாந்
தேர்தல் விதிமுறைகளை மீறி, தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாமெனத் தடுத்த மாநகர சபை உறுப்பினர் ஒருவரை, ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மிரட்டிய சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில், நேற்று முன்தினம் (07) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்களே, இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனை மிரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அப்பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், நேற்று (திங்கட்கிழமை) இரவு, கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் - பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தனது வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது தான் அதை எதிர்த்ததாகவும் தெரிவித்தார்.
இதன்போதே, அவர்கள் தன்னை மிரட்டியதாகத் தெரிவித்த அவர், மிரட்டல் பாணியுடனும் மீண்டும்சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு முயற்சித்ததாகவும் கூறினார்.
இருப்பினும், அதற்கு தான் அனுமதி வழங்காதன் காரணமாக, அது பெரும் வாய்தர்க்கமாக மாற, அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டதாகத் தெரிவித்த அவர், ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, தனது வீட்டு சுவரிலும் வீட்டு கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .