2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாநகரசபை முன் வியாபாரிகள் போராட்டம்

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் அவர்கள் இந்தப் போராட்டத்தை இன்று (09) காலை ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது.

அதன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பஸ் நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 63 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து மாற்று இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி வியாபாரிகள் அமைதிவழிப் போராட்டத்தை இன்று (09) ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கையை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் நிறைவேற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .