Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (30) இடம்பெற்றது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, கஸ்தூரியார் வீதி வழியாக, மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையை நிறைவடைந்தது.
அதன் பின்னர் தாதியர் பயிற்சிக் கல்லூரியில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உரையாற்றுகையில்,
“வைத்தியசாலைகளில் பற்றாக்குறைகள் இருக்கின்ற போதும், எம்மாலான சிறந்த சேவையை வழங்கி வருகின்றோம். ஆனால், அதையும் தாண்டி, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிகிக்சை பலனின்றி சிலர் இறக்கக் கூடும். மக்கள் அதனை சரியான வகையில் புரிந்து கொள்ளாமல், கவனயீனத்தால் உயிரிழப்பு நேர்ந்துள்ளது எனக் கூறுவது தவறு.
“மக்கள் தமது சுக நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதனை விட்டு தமது உடல் நலத்தில் கவனமின்றி பல்வேறு வியாதிகளுடன் வருகின்றவர்களையும் வைத்தியசாலை முகங்கொடுக்க நேரிடுகின்றது” எனத் தெரிவித்தார்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025