Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 ஜூன் 07 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
“யுத்தத்தை மேற்கொண்ட அரசாங்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்திக்க வேண்டும்” என வடமாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விட, மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். போரின் காரணமாக மீள எழும்ப முடியாதவர்களாகவும் அவர்களுடைய குடும்பங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாததாகவும் வறுமை அதிகரித்த வண்ணமே சென்று கொண்டிருக்கிறது.
பல மாணவர்கள், பெண்கள் இன்று தம் அவயங்களில் செல் துண்டுகளை சுமந்த வண்ணம் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது பிற்காலங்களில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. இது பற்றி அரசாங்கம் சிந்திக்கவில்லை. சுருக்கமாக யுத்தம் என்ற ஒன்றை வெற்றிகரமாக முடித்து, உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்று சாதாரணமாகக் கூறுகின்றது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை, இனி ஏற்படப்போகும் விளைவுகளை சிந்திக்கவில்லை. இவ் கொடூர யுத்தம் எம் இனத்தின் வீரியத்தை, எம் சந்ததியின் உரிமைகளை மற்றும் வளர்ச்சியை நசுக்கியுள்ளது. இவையெல்லாம் ஆராயப்படவேண்டும்.
வடமாகாணத்திற்கென தனித்துவமான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. உதவிகள் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் இச் செயல் வேதனையளிக்கிறது. ஏனெனில் பிற மாகாணங்களுடன் இவர்களுடைய பிரச்சினைகளை ஒப்பிடமுடியாது. யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வட மாகாணத்திலேயே உள்ளனர். ஆயினும் தமக்குரிய தீர்வுகள் எட்டாத நிலையிலும் கூட மாற்றுத்திறனாளிகள் ஓர் தொழிலைச் செய்வோம் எனும் தமது சுய முயற்சி உண்மையிலேயே போற்றக்கூடியது.
அவர்களுக்கு வழங்கக்கூடிய 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகள் கூட 3 ஆயிரம் பேருக்கே வழங்கப்படுகிறது. அக் கொடுப்பனவு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு போதாத நிலையிலும் இவ் அரசினால் தகுதியான எல்லோருக்கும் வழங்க முடியாதிருப்பது அவர்கள் நலன் சார்ந்து இவ் அரசு யோசிக்கவில்லை என்ற ஐயத்தை தோற்றிவித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை, திட்டங்களை இப்பகுதியில் நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago