Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (08) காலை, மாவட்டச் செயலக உத்தியோகத்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
வாள்வெட்டை மேற்கொண்டவர்கள் சம்பவ இடத்தில் பணப்பையை (பேர்ஸ்) கைவிட்டுச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரே, வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பச்சென்றுள்ளனரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாவட்டச் செயலக உத்தியோகத்தர் வாசலில் நின்றுக்கொண்டடிருந்த போதே, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரில், இருவர் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்டதுடன், அவரது மோட்டார் சைக்கிள் என நினைத்து, அருகில் நின்ற வேறொரு நபரின் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025