2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மாவா பாக்கு வைத்திருந்தவருக்கு சிறை

எம். றொசாந்த்   / 2018 ஜூலை 11 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா கலந்த மாவா பாக்கை உடைமையில் வைத்திருந்த நபருக்கு, 3 மாத சிறைத்தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று (11) உத்தரவிட்டார்.

கடந்தாண்டு இறுதியில், யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப் பகுதியில் வைத்து, 70 பக்கெற்றுகளில் பொதியிடப்பட்ட 30 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளை, பொலிஸார் மீட்டனர். இதன்போது, அதனை உடமையில் வைத்திருந்தக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தபோது, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன், அவரிடம் மீட்கப்பட்ட மாவா பக்கெற்றுகளை, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி, பரிசோதனை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சந்தேகநபர் மீதான வழக்குஇன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எதிரியைக் குற்றவாளியாக இனங்கண்ட நீதவான், அவருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .