2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாட்டுக்குழு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதென, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்தே, மாவீரர் செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது” என்றார்.

மேலும், எந்த அரசியல் கட்சியினரையும் இச்செயற்பாட்டுக்குழுவில் உள்ளீர்ப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், அரசியல் களமாக மாவீரரையோ துயிலுமில்லத்தையோ எவரும் பயன்படுத்த கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .