Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய வரலாற்றிலேயே பெருந்தொகை கஞ்சாவை கடத்தலை முறியடித்து பெரும் குற்றச் செயல் ஒன்றைத் தடுத்து நிறுத்தியவர்கள் பொன்னாலை இளைஞர்கள் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார தெரிவித்தார்.
இதற்காக பொன்னாலை இளைஞர்களையும் பொதுமக்களையும் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி பாராட்டியுள்ளார்.
பொன்னாலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார, இலங்கையில் கஞ்சா, ஹெரோயின் என்பன பாரியளவில் வியாபாரமாக நடைபெறுகின்றது. இதை பொலிஸாரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்புடனேயே இதை முறியடிக்க முடியும்.
வட்டுக்கோட்டை பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் கஞ்சா கடத்தலை முறியடித்து நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய குற்றச்செயலைக் கட்டுப்படுத்த உதவியவர்கள் பொன்னாலை இளைஞர்கள். இதற்காக பொன்னாலை மக்களையும் இளைஞர்களையும் வட்டுக்கோட்டை பொறுப்பதிகாரி பாராட்டியிருக்கின்றார்.
இதேபோன்று, ஏனைய பிரதேச மக்களும் இளைஞர்களும் செயற்படுவார்களாயின் இயன்றவரை போதைப்பொருள் கடத்தலை முறியடித்து குற்றச்செயல்களைக் குறைக்க முடியும் – எனத் தெரிவித்தார். R
22 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
3 hours ago