2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மினி சூறாவளியில் முறிந்த பனைமரங்கள்

Freelancer   / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

மினி சூறாவளி காரணமாக பனைமரங்கள் முறிந்து வீழ்ந்து, பருத்தித்துறை- கொடிகாம்ம் பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் நேற்று  முதல் பாதிக்கப்பட்டிருந்ததுடன், மாலை 6 மணி வரை மின்சாரமும் தடைப்பட்டருந்தது.

இதனால் வரணிப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

நாவற்காடு, கரம்பைக்குறிச்சி இடைக்குறிச்சி மற்றும் வரணி வைத்தியசாலை போன்ற இடங்களில் மரங்கள் முறிந்து மின் வடங்கள் மீதும் வீதிக்கு குறுக்காகவும் வீழ்ந்தமையால்  குறித்த பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது.

அத்துடன், நாவற்காடு பகுதியில் வயல்கரை அண்ணமார் ஆலயம் ஒன்றின் மண்டபம் மற்றும் மடப்பள்ளி ஆகியன முற்றாக சேதமடைந்துள்ளன. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .