Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 20 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் - காங்சேன்துறை வீதி, உப்புமடத்தடிப் பகுதியில், இன்று (20) காலை, நபர் ஒருவர், மின்சாரம் தாக்கி, எரிகாயங்களுக்குள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா ரெலிக்கொம்மின் பகுதியளவாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்று, வீதி ஓரமாகக் கம்பங்களை நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், நேற்றுக் காலை, உப்புமடத்தடியில் வீதியோரமாக கம்பங்கள் நடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, கம்பம் நடுவதற்கான குழி தேண்டப்பட்ட நிலையில், பாரம் தூக்கும் இயந்திரம் (கிரேன்) ஊடாக கம்பத்தை நாட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டது.
இதன் போது அங்கிருந்த உயர் மின்சாரம் கடத்தப்படும் கம்பியொன்று, கம்பத்துடன் தொடுகையுற்றதால், பாரம்தூக்கும் இயந்திரத்துக்கு மின்சாரம் கடத்தப்பட்டுள்ளது.
இதனால் பாரம்தூக்கும் இயந்திரத்தை இயக்கியவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் தூக்கி வீசப்பட்ட அவர், அங்கிருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தக் கம்பம் நாட்டும் பணிகள், உரிய முறையில் மின்சார சபைக்கு அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்டதாலேயே, இச்சம்பவம் நடந்துள்ளதாக, மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
47 minute ago