2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மிரட்டல் விடுத்ததாக தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் முறைப்பாடு

Editorial   / 2022 ஒக்டோபர் 31 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

தன்னை மிரட்டி, தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என தென்னிலங்கை கட்சி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

காணி பிணக்கு தொடர்பில் தமக்கு சாதகமாக செயற்படுமாறு கட்சி உறுப்பினர்,  தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரை கோரியுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே , கட்சி அலுவலகத்திற்கு நேரில் வருமாறும், இல்லாவிடின் தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி இடமாற்றம் செய்வேன் என தொலைபேசி ஊடாக மிரட்டியுள்ளார்.

தனக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு காணப்படுவதாகவும் , அத்துடன் அரசியல் பலம் இருப்பதனால் தன்னால் உடனடியாக இடமாற்றம் வழங்க முடியும் என மிரட்டியமையால், தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதுடன் , இதனால் மிகுந்த மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன் என பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து உரிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் மத்தியில் தயக்கம் காணப்படுவதாகவும் , அதனால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X