2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘மீண்டும் கூரேயே வேண்டும்’

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் கூரேயை நியமிக்க கோரி யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று (07) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில், சாவகச்சேரி சமுத்தி பயனாளிகள், சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள் கலந்து கொண்டன.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தமிழ்மொழி பேசக் கூடியவராக இருக்கின்ற நிலையில், தமது தேவைகளை உடனடியாக தீர்த்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது என தெரிவித்தனர்.

மேலும் மீண்டும் அவரையே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க கோரிய மூன்று மகஜர்களை யாழ்.மாவட்ட உதவி செயலர் திருமதி தெய்வேந்திரம் சுகுணரதியிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .