Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில், மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (24) மீளவும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.
கடந்த வருடங்களில், விலங்குகள் சித்திரவதையைக் காரணம் காட்டி, வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில், மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மாடுகள் எவ்வகையிலும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்துடன், ஞாயிற்றுக்கிழமை (24) இப்போட்டிகள் சர்ச்சைகள் இன்றி மீளவும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றன.
வலிகாமம் கிழக்குப் பகுதியில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரிப்போட்டிகள் கிரமமாக நடைபெற்று வந்தன.
எனினும், கடந்த ஆண்டுகளில் மாட்டுவண்டிச் சவாரிகளின் போது, மாடுகள் சித்திரவதை செய்யப்படுவதாக, விலங்குகள் ஆர்வலர்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸாரின் தலையீடுகளை அடுத்து போட்டிகள் தடைப்பட்டிருந்தன.
எனினும், இந்த வருடத்துக்கான மாட்டு சவாரிப் போட்டிகள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகியோர் பல்வேறு மட்டங்களுடனும் தொடர்பு கொண்டு எடுத்த முயற்சிகளை அடுத்து, குழப்பங்களுக்கு இடமின்றி, நீர்வேலி தரவையில் மாட்டுவண்டிச் சவாரி கழகத்தின் தலைவர் கிரி தலைமையில், ஞாயிற்றுக்கிழமை போட்டிகள் நடைபெற்றன.
மட்டுவில், வீரபத்திரர் ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதி சேகரிப்புக்காகவே, இப்போட்டி நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .