Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
யாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கு பகுதிகளில், அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் இன்று விஜயம் செய்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பகுதியில், ஊறணி, தையிட்டி, மயிலிட்டி கிராமங்களுக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அங்கு மக்களைச் சந்தித்து, மக்களின் குறைகள், தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இதன்போது ஊறணி, தையிட்டி மக்கள் கூறுகையில், “மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், வாழ்வாதார உதவிகள் எவையும் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. விசேடமாக, கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் எமது மக்களுக்கு வலைகள் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் இறங்குதுறையும் அமைக்கப்படவில்லை.
தற்போது கடற்படையினர் அமைத்து கொண்டுத்த கொட்டில் ஒன்றையே கடற்றொழிலாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இறங்குதுறை அமைத்துக் கொடுக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தற்போதுள்ள இறங்குதுறையில் வெளிச்சம் இல்லை. கடற்றொழிலாளார்கள் தங்கியிருக்கவும், இரவு வேளைகளில் படகுகளைக் கட்டவும் வெளிச்சம் தேவைப்படுகின்றது. எனவே அந்த பகுதியில் சோலார் விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என மக்கள் கேட்டுள்ளனர்.
தொடர்ந்து, அண்மையி ல் விடுவிக்கப்பட்டிருக்கும் மயிலிட்டி துறைமுகத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார். இதன்போது மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் மயிலிட்டி மக்களின் குடியிருப்பு காணிகள் படையினரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றது.
இந்நிலையில், கடந்த 27 ஆண்டுகளாக, மயிலிட்டி மக்கள், பருத்துறையிலேயே தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் மயிலிட்டித் துறைமுகத்துக்கு வந்து தொழில் செய்வதற்கு இலகுவான தரைவழிப் பாதை இன்னமும் திறக்கப்படாமல் படை யினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. இதனால் மயிலிட்டி துறைமுகத்துக்கு, மக்கள், தொழிலுக்காக வருவதற்கு தினசரி 50 கிலோ மீற்றருக்கும் மேல் பயணம் செய்தே தொழிலுக்கு வரவேண்டியுள்ளது. அந்தவகையில், மயிலிட்டி மக்களின் குடியிருப்பு காணிகளை விடுவிப்பதற்கும் இலகுவான தரை வழிப்பாதையை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மயிலிட்டி மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதேபோல், தையிட்டி மற்றும் ஊறணி மக்கள் கூறுகையில் மீள்குடியேற்றப்பட்ட பெருமளவு குடும்பங்க ளுக்கு இன்னமும் நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை. காரணம் 27 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago