Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஜூலை 09 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தின் முகப்பு பகுதிகளில் இருந்து, நேற்று, அதிகளவிலான சிதறிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி அகழ்வுப் பணிகள், தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு, ஏற்கெனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதியளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரளவுக்கு முடிவடைகின்ற நிலையை எட்டியுள்ளது.
இந்நிலையில், மேற்படி அகழ்வுப் பணிகள், இன்று (09) 29ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வளாகத்தின் முகப்பு பகுதியை மேலும் அகலப்படுத்தி, ஆழப்படுத்தி மனித எச்சங்கள் காணப்படுகின்றனவா என ஆராய்ந்து பார்த்த போதே, மேலும் அதிகளவிலான சிதறிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, முகப்பு பகுதிகளில் தற்போது இன்னும் அதிகளவிலான மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முகப்புப் பகுதியை மேலும் ஆழப்படுத்தி, அகழ்வு செய்வதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள், குறித்த வளாகத்திலே சுத்தப்படுத்தப்பட்டு, இலக்கமிடப்பட்டு, சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு, நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025