Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ். மாவட்டத்தில், கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள், இன்று (11) காலை முடக்கல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், முடக்க நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகுமெனவும் வலியறுத்தினார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்கள், இன்று (11) தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முடக்கப்பட்ட பிரதேசங்கள் முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கிருமி தொற்று அச்சம் தொடர்ந்து காணப்படுகின்றதென்றார்.
அத்துடன் முடக்க நிலையிலிருந்து விடுபட்ட கிராமங்களுக்கு மேல் மாகாணம் அல்லது ஏற்கெனவே கொரோனா வைரஸ் அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago