2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முதன்மை வளாகத்துக்குள் நுழையத் தடை விதிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதென, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதன்மை வளாகத்துக்குள் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலைமை தொடர்பில், துணைவேந்தருடன் அனைத்துப் பீடாதிபதிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை​) கூடி ஆராய்ந்தனர்.

“அதன்படி, கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .