Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 21 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது” என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈ.பி.ஆர்.எல்.எவ் 100 க்கு 100 வீதம் புனிதமற்றது என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்றுக் கொண்டுள்ளார். நாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து 2010ஆம் ஆண்டு வெளியேறி கூட்டமைப்பினரின் இரகசிய நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்தி வந்தோம். அப்போது என்ன பொய் கூறியதோ தற்போதும் அதே பொய்யை சொல்லி தான் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் தனியான ஒரு கட்சியை ஆரம்பிப்பாராக இருந்தால், அந்த கட்சியில் யார் இடம்பெறுவது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இது தவிர முதலமைச்சர் தனியே எங்களோடு இணைந்து கொள்ளாமல் செயற்படுவாராக இருந்தால் அது நேர்மையான அரசியலுக்குரிய வாக்கு வங்கியை பிரிப்பதாக தான் இருக்கும்.
8 வருடமாக நாம் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை சுட்டிக்காட்டி வந்தோம். இதற்காக சிரத்தைகள் பலவற்றை எடுத்துக்கொண்டோம். முதலமைச்சர் தனியான ஒரு கூட்டை உருவாக்குவதாக இருந்தால் தேசியத்துக்கு மாறான தரப்புக்கு தான் வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆகவே முதலமைச்சர் முன்னணியோடு இணைந்து செயற்பட வேண்டும்.
முதலமைச்சருக்கு கொழும்பை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஒரு நேர்மையான அரசியலை கடைப்பிடித்ததால் தான் மக்கள் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள். எந்த அழுத்தங்களுக்கும் விலை போகாமல் கொள்கையோடு இருந்தவர். வெறுமனே கூட்டமைப்பை தோற்கடிப்பதாக முதலமைச்சரின் புதிய கூட்டு இருக்கக் கூடாது. இந்த விடயம் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் விடயம்.
எமக்கு அதீத நம்பிக்கை முதலமைச்சர் மீது இருக்கின்றது. அவருடன் ஒரு புரிந்துணர்வுக்கு போக விரும்புகின்றோம். அவர் எம்மோடு இணைந்து செயற்பட தயாரானால் அதற்குரிய மதிப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்” என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago