2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முதியவரை அடித்து கொலை ; ஒருவர் கைது

Janu   / 2023 நவம்பர் 19 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சனிக்கிழமை  (18) இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறிபிபிட்ட உணவகத்தில்  ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த வாய் பேச இயலாத 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X