2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு இன்னுமொரு கட்சி

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் போராளிகளை உள்ளடக்கி, தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் எனும் புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு, கிளிநொச்சியில் உள்ள பாரதி தனியார் விடுதியில், இன்று (30) நடைபெற்றது.

இதன்போது, இரண்டு மாவீர்களின் தாயொருவர் சுடரேற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சுந்தரம்பிள்ளை சிவகுமார், செயலாளர் கணேசன் பிரபாகரன் ஆகியோர் விளக்கேற்றி, நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

ஏற்கெனவே ஜனநாயகப் போராளிகள் கட்சி இயங்கி வருகின்ற நிலையில், நேற்று (30) புதிதாக, தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .