2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘முன்னுரிமை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொள்வேன்’

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

“குறுகிய காலத்தில், அனைத்ததையும் செய்ய முடியாது. என்றாலும், முன்னுரிமை அடிப்படையில், அவற்றுக்கான சிறந்த அடித்தளத்தை இடமுடியும்” என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சர்வேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர் கூறியதாவது,

“மறுசீரமைப்பு நடவடிக்கைகள் செய்ய வேண்டியுள்ளது. எமக்கு குறுகிய காலமேயுள்ளது. குறுகிய காலத்தில் அனைத்தையும் செய்ய முடியாது. என்றாலும், முன்னுரிமை அடிப்படையில் அவற்றுக்கான சிறந்த அடித்தளத்தை இட்டு சீர்செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

“எமது கல்வி 9ஆவது இடத்தில் உள்ளது. அதனை மேலே கொண்டு செல்ல வேண்டும். 30 ஆண்டு கால யுத்தத்தில் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் உள்ளன. அதனை ஓரிரு நாட்களில் திருத்த முடியாது. கண்டிப்பாக அதனைத் திருத்த நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அனைத்து நடவடிக்ககைளையும் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து, அமைச்சர் வாரியத்தில் கலந்தாலோசித்து மாகாண சபையில் கொண்டு சென்று உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தான் அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.

“இதேவேளை, மக்கள் தமக்கு சேவையாற்றவே அதிகாரம் வழங்கியுள்ளனர். அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X