Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 15 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
வடமாகாண மக்களின் “முன்னோக்கி நகர்வோம்" எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில், இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளான நிலையில், வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களுக்கு வினைத்திறனான சேவை வழங்கல் தொடர்பில் மாகாண சபையும், மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வடமாகாண சபை முக்கிய வகிபாகம் வகிக்கின்றது. இந்நிலையில் மத்திய, மாகாண அரசாங்கங்கள் வழங்குகின்ற சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை இவ்வலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.
இவ்வலுவலகம் யாழ்.கைலாசபதி பிள்ளையார் ஆலய பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் அ.பரம்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
47 minute ago
2 hours ago