Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
கொரோனா வைலஸ் பாதிப்பு காரணமாக, முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, உலக வங்கியால் வழங்கப்பட்ட கைகழுவும் உபகரணங்கள், வவுனியா பிரதேச செயலகத்தில், நீண்ட நாள்களாகத் தேங்கிக் காணப்படுகின்றன.
மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக, உலக வங்கியால் வழங்கப்பட்ட குறித்த பொருள்கள் முன்பள்ளிகளுக்குப் பகிர்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், வவுனியா பிரதேச செயலகத்தில் அவை பகிர்ந்தளிக்கப்படாமல் காணப்படுவதற்கு, அரசியல்வாதிகள் காரணமாக உள்ளனரா என சந்தேகம் எழுந்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள பல முன்பள்ளிகள் நிதி வசதியின்றி, போதுமான சுகாதார மேம்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பிரதேச செயலகத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக குறித்த பொருள்கள் தேங்கி கிடப்பது தொடர்பில், பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளரிடம் வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், குறித்த அமைச்சினூடாக பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
எனினும், அமைச்சினூடாகவே வழங்கப்பட வேண்டும் என தமக்கு தெரிவிக்கப்பட்டமையால், பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் திகதி தந்ததன் பின்னர் அவர்களினூடாக வழங்கி வைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .