2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளிக் கட்டடத்தில் அட்டகாசம்

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் மூடப்பட்டுள்ள முன்பள்ளிக் கட்டடத்தில், மாலை நேரங்களில் ஒன்றுகூடும் போதைப் பொருள் பாவனையாளர்களும் மது அருந்துபவர்களும் அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றனரென, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எவ்வித நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லையெனவும், அப்பகுதி மக்கள் சாடியுள்ளனர்.

இதேவேளை, இந்த முன்பள்ளி கட்டடத் தொகுதிக்கு, சில பொலிஸார் சிவில் உடையில் வந்து செல்கின்றனரெனவும், மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X