Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 16 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம்” என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதுக்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம்.
எதிர்வரும் 18 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
42 minute ago
1 hours ago