2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஆரம்பம்

Editorial   / 2018 மே 09 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இக்கலந்துரையாடலில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது ஒன்றிய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .