Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீத்
நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வட பகுதியில் தொடர்ந்தும் முழுவீச்சில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. அதற்கமைய, பெருந்தொகையான கொடுவா மீன் குஞ்சுகள் நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன.
இரணைதீவு, கௌதாரிமுனை, மூன்றாம்பிட்டி, இலுப்பைக் கடவை, விடத்தல் தீவு, நாயாறு உட்பட வடக்கின் தெரிவுசெய்யப்பட்ட பல்வேறு நீர் நிலையகளில் நேற்று (13) “நக்டா” எனப்படும், இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 22ஆம் திகதி கடற்றொழில், நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடளாவிய ரீதியில் காணப்படும் நன்னீர் மற்றும் பருவ கால நீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் பல்வேறு நீர் நிலைகளில் இறால், மீன் குஞ்சுகள் இடப்பட்டு, அவை பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தன.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக மீண்டும் நேற்று தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், வடக்கின் பல்வேறு நீர் நிலைகளிலும் கொடுவா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
57 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
26 Aug 2025