2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘மூவினத்தவரும் ஒற்றுமையாக இருப்போம்’

Princiya Dixci   / 2022 மே 11 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் வட, கிழக்கில் வசிக்கும் மூவினத்தவரும் ஒற்றுமையாக இருப்போம் என வடக்கு முதன்மை சங்கநாயக்க தேரர் பூஜ்ய சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தெரிவித்தார்.

நாட்டு நிலமை தொடர்பாக இன்று (11) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் ஒரு மாதத்துக்கும் மேலாக அகிம்சை ரீதியான போராட்டம் இடம்பெற்றுவந்தது. அதனை பொருட்படுத்தாத அரசாங்க ஆதரவாளர்கள் அவர்களை தாக்கி, அவர்களது போராட்டத்தை குழப்பியமையாலேயே நாட்டில் இந்தச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

“எங்களுக்குள் இன, மத, மொழி பேதம் பார்த்தால் போராட்டத்தின் நோக்கமே தடம் மாறிபோய்விடும். எனவே, அதற்கு இடம்கொடுக்காமல் அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்தாலே இந்தப் போராட்டம் வெற்றியடையும்.

“எனவே, வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதர்கள் இப்படியான சூழ்நிலையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X