2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘மேலதிக உணவுகளை வழங்கி உதவவும்’

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

வடக்கு - கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறும் கொண்டாட்ட நிகழ்வுகளில், மேலதிகமாக காணப்படும் உணவுகளை தம்மிடம் தந்துதவுமாறு, விண்மீன்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

வடக்கு - கிழக்கில் உணவுக்காக அல்லலுறும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு, வடக்கு - கிழக்கு பகுதியில் எப்பாகத்திலேனும் இடம்பெறும் திருமண நிகழ்வுகள் உட்பட கேளிக்கை மற்றும் குடும்ப நிகழ்வுகளில், மேலதிகமாக உள்ள உணவுகளைத் தாம் பெற்று வருவதனால், அந்த உணவுகளைத் தம்மிடம் தந்துதவுமாறு அவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, பழுதடையாத நிலையில் காணப்படும் உணவுகளை மாத்திரமே, தம்மால் உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு வழங்க முடியும் என்பதனால், மேலதிக உணவுகளைக் காலம் தாழ்த்தாது தரும் பட்சத்தில், அதனைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் எனவும் பணமாகத் தாம் பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே, மேலதிக உணவு நிகழ்வுகள் வரும் பட்சத்தில், 077-0763610, 077-8480603, 077-0702280 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X