Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பிள்ளையார் கோயிலடியில் உள்ள வீட்டுக்காணி ஒன்றில் இருந்து 60 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகள் இரண்டு இன்று (09) கைப்பற்றப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
யுத்த காலத்தின்போது, குறித்த பகுதியில் இருந்த வீட்டை இராணுவத்தினர் பயன்படுத்தினர்.
இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணியில், நேற்று (08) துப்பரவு பணியை மேற்கொண்டபோது, மோட்டார் குண்டுகள் இரண்டு தென்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குண்டுகளை மீட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .